" " " "

அஜித்திடம் உள்ள கெட்ட குணத்தால் இணைந்து நடிக்காமல் இருக்கும் வடிவேலு..! அஜித் வடிவேலு இணைந்து நடிக்காதற்கு காரணம் இது தானாம்..!!

தல அஜித் என்றால் தன் நம்பிக்கை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித் அமைதியானவர், அன்பானவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அஜித்தை பற்றி கூறுவதற்கு பெரிதாக கெட்ட விடயங்கள் இருக்காது. அவரை பற்றி அனைவருமே நல்லவற்றை மட்டுமே பேசுவார்கள். ஆனால் அஜித்திடம் கெட்ட பழக்கம் இருக்கு என்கின்றனர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அஜித் வடிவேல் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற திரைப்படம் “ராஜா”. இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் மருமகனாக அஜித் நடித்திருப்பார். இந்த திரைப்படம் நடிக்கும் போது அஜித் பெரிய அளவில் பிரபலம் இல்லை ஆனால் வடிவேலு முன்னணி காமெடி நடிகராக இருந்தார்.

இந்த திரைப்படத்தில் அஜித்தை வடிவேல் மட்டம் தட்டுவதை உணர்ந்த அஜித் தனது காட்சிகளை மட்டும் நடித்ததுடன் இயக்குனரிடம் மரியாதை அற்ற வார்த்தைகளை திரைப்படத்தில் பயன் படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். ஒருமையில் வாடா போடா என்று பேசும் காட்சிகள் வேண்டாம் என கூறினார். இதனால் இந்த திரைப்படத்தில் வடிவேலு அஜித்தை வாங்க மாப்ள போங்க மாப்ள என்று பேச வேண்டும் என கூறப்பட்டது.

ஆனால் வடிவேலு அதற்கு எதிராக பேச தொடங்கினார். வா போ என்று பேச பிடிவாதம் பிடித்தார். இதனால் பல காட்சிகள் எடிட் செய்யப் பட்டது. இதில் அஜித்திடம் இருக்கும் கெட்ட குணம் யாதெனில் அவர் யாரையும் மரியாதை குறைவாக பேச மாட்டார் . சிறியவர்களை கூட வாங்க போங்க என பேசும் அஜித் தான் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை மற்றவர்களும் தனக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பார்.

யாரையும் வா போ என அஜித் பேசிவதில்லை, அதே போல் அவரிடமும் அப்படி யாரும் பேச கூடாது என நினைக்கும் அஜித் அப்படி பேசினால் அதிக கோபப் படுவார். அத்துடன் அவர்களுடனான உறவை துண்டித்துக் கொள்வார். வடிவேலுவுடன் உறவை துண்டித்துக் கொண்டதற்கான காரணம் இந்த கெட்ட குணம் தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்..!!