" "" "

அஜித் பலமுறை காதல் சொல்லியும் அஜித்தை பிடிக்கவில்லை என காதலை ஏற்காமல் சென்ற பிரபல நடிகை. இவர் தானாம் அந்த நடிகை.!

தமிழ் சினிமாவில் தல என செல்லமாக கொண்டாடப் படுபவர் நடிகர் அஜித் குமார். சாதாரண குடும்பத்தில் பிறந்து மெக்கானிக்கல் படித்து, சிறு வயதில் இருந்து தனக்கு பிடித்தவற்றை விரும்பி செய்து வந்த நடிகர் சினிமாவின் பக்கம் தனது பார்வையை திருப்பிய போது அவரை ஏற்றுக் கொள்ள சினிமா தயாராக இல்லை. காரணம் அவரால் சரியாக பேச முடியாது, திக்கு வாய், ஒரு வார்த்தை பேச சில நிமிடங்கள் ஆகும், இதனை ஆரம்பத்தில் காரணம், காட்டினார்கள்.

பின்னர் தமிழ் தெரியாது, நடிக்க தெரியாது என தமிழ் சினிமாவில் ஒதுக்கினார்கள். எதனையும் கண்டுகொள்ளாத அஜித் தொடர்ந்து முயற்சி செய்தார். அன்று பிரபலமாக இருந்த நடிகைகள் சிலர் அஜித்துடன் நடிக்க மறுத்தனர். இந்த நிலையில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் நடிகை ஹீரா. நல்ல தோழியாக அஜித்துடன் தொடர்ந்து பயணித்தார். இதனால் இருவரும் காதலிப்பதாக சினிமாவில் கிசுகிக்கள் பரவியது.

ஹீரா மீது அஜித்க்கு ஏற்கனவே நல்ல எண்ணம் இருக்க அதனை கதலாக மாற்றினார் அஜித். இதனை தொடர்ந்து தனது காதலை ஹீராவிடம் கூறினார். ஆனால் ஆரம்பத்தில் காதல் எல்லாம் வேண்டாம் என கூறிய ஹீரா பின்னர் நீயே வேண்டாம் என அஜித்திடம் இருந்து விலகி சென்றார்.

பலமுறை காதலை சொல்லியும் ஹீரா அஜித்தின் காதலை ஏற்கவில்லை என்பது அன்றைய காலத்திற்கு பொருத்தமாக இருந்தது, ஏனெனில் அன்று அஜித் பிரபலமாக இருக்கவில்லை. அதன் பின் அஜித் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது ஷாலினியுடன் காதலில் விழுந்தார், ஷாலினியும் அவர் காதலுக்கு ஓகே சொல்ல சினிமா ரசிகர்களால் கொண்டாடும் ஜோடியாக இருவரும் இருக்கின்றனர்.!