" "" "

“என்னை நிழல் போல் தொடர்ந்த உங்கள் மரணத்தை என்னால் தாங்க முடியவில்லை” சோகத்தில் அக்‌ஷரா ஹாசன் பகிர்ந்த பதிவு..!

கொரோனா வைரஸின் பரவலானது பல உயிர்களை பறித்து வருகிறது, பார்த்து பழகிய பல முகங்கள் திடீரென மரணம் என்ற செய்தி ஒவ்வொருவருக்கும் தீராத வலியை கொடுக்கிறது. அப்படி நேற்றைய தினம் கமலஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசனின் மேக் அப் மேனின் மரணமும் அக்‌ஷராவிற்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளதாக அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அக்‌ஷரா ஹாசனின் சினிமா பயணம் ஆரம்பித்ததில் இருந்து அவரின் மேக்கப் மேனாக இருந்தவர் சச்சின். திருமணம் முடித்து இரண்டு ஆண் குழந்தைகளின் தந்தையான சச்சின் அக்‌ஷரா ஹாசனின் மேக் அப் மேன் மட்டும் இன்றி சிறந்த பாதுகாவலராக மகளை போல் கவனித்து வந்துள்ளார். திரைப்பட சூட்டிங் இல்லாததால் சச்சின் அக்‌ஷராவை கடந்த 3 மாதங்களாக சந்திக்க வில்லை.

இந்த நிலையில் சச்சினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிப்படுத்தப் பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அக்‌ஷரா மற்றும் சச்சினின் குடும்பத்தை மிகவும் பாதித்த நிலையில் இது பற்றிய உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் ” எப்போதும் என் நிழலாக தொடர்ந்தீர்கள், உங்களை போன்ற ஒரு அழகான உயிரை இழப்பேன் என நினைதிருக்க வில்லை. உங்கள் மகன்களுக்கு நல்ல அப்பாவாக மனைவிக்கு நல்ல கணவராக இருந்தார்கள், உங்களை போன்ற ஆண்கள் ஒரு சிலர் தான் பூமியில் வாழ்கின்றனர்” உங்கள் ஆன்மா அமைதியாகட்டும் என பதிவிட்டுள்ளார்..!!