அமெரிக்கப் படையை வெளியேற்ற நினைத்தால் ஈராக் மீது பொருளாதாரத்தடை!

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற நினைத்தால் ஈராக் மீது பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அமெரிக்கா – ஈரானிடைய நடந்துவரும் மோதலின் உச்சக்கட்டமாக ஈராக்கின் பக்தாத் தலைநகரில் அமெரிக்கா வான்படைத் தாக்குதல் மேற்கெர்ணடது. இதில், ஈரானின் இராணுவத் தளபதி கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக அமெரிக்கத் தூதருக்கு ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
அதில் ‘‘ஈராக் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதாகும். இது சர்வதேச கூட்டணியின் ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளுக்கு முரணானது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அமெரிக்க அதிபர் பொருளாதாரத் தடை என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தவை வருமாறு-

“அமெரிக்கா மீதோ, அமெரிக்கர்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் உடனடியாகப் பதிலடி கொடுப்போம். அதேவேளை, ஈரான் இனியும் எதாவது எச்சரிக்கை விடுத்தாலே நாங்கள் அடுத்த கட்டத் தாக்குதலை தொடங்குவோம். நாங்கள் நடத்தும் தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்குப் பயங்கரமாக இருக்கும்.

அதேவேளை, அமெரிக்க இராணுவத்தை ஈராக்கிலிருந்து வெளியேற்ற அந்நாடு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. ஈராக்கின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது ஈராக்கில் ஐயாயிரம் அமெரிக்க இராணுவத்தினர் உள்ளனர். ஆனாலும், அவர்களை வெளியேற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தினால், அந்த நாட்டுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டியிருக்கும்” என்றார்.