கன்ஸாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கி பிரயோகம்..!!!

அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில் இன்று துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் 4 பேர் உயிரிழந்தனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அமெரிக்காவின் மத்திய-மேற்கு பகுதியில் மிசவுரி மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கன்ஸாஸ் நகரில் உள்ள டெக்கிலா கே.சி. என்ற மதுபான விடுதி இன்று துப்பாக்கி பிரயோகம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நடைபெற்றது. அந்த நேரத்தில் விடுதியில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை உருவி அருகில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் துப்பாக்கி தோட்ட துளைத்து படுகாயங்களுடன் கீழே கிடந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதேவேளை, கொலையாளி தப்பியோடி விட்டதாக தெரிவித்த கன்ஸாஸ் நகர பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.