" "" "

பகலில் ஆண், இரவில் பெண், சுமார் 70 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய அமேசானில் பணி புரியும் 25வயது இளைஞர்.! பொலீஸாரை அதிர வைத்த சம்பவம்..!!

அமேசான் நிறுவனத்தில் பணி, கை நிறைய சம்பளம் ஆனாலும் அடங்காத பண ஆசையால் இளைஞர் ஒருவர் செய்த மோசமான செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயவாடாவை சேர்ந்த சுமன் என்கிற 25 வயது இளைஞருக்கு அமேசான் நிறுவனத்தில் பணி கிடைத்த நிலையில் ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

வெளி இடம் நண்பர்கள் யாரும் இல்லை என்பதால் பகல் முழுவதும் பணி புரிந்துவிட்டு இரவில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்துள்ளார். இவருக்கு பேஸ்புக்கில் திடீரென மோகம் ஏற்பட பேக் ஐடி ஒன்றை உருவாக்கி அதில் தனது பெயரை சுமன் என்று போட்டுள்ளார். பொதுவாக சுமன் என்று பெண் பெயரும் இருப்பதால் அனைவரும் அவரை பெண் என்று நம்பியுள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆண் பெண் என 5 ஆயிரம் நண்பர்களை இணைத்துள்ளார். தன்னை முழுமையாக பெண்ணாக காட்டிக் கொண்ட சுமன் பெண்ணை போலவே பதிவுகளை போட்டுள்ளார். இதனால் சுமனை பெண் என நம்பிய பெண்கள் சாட் செய்துள்ளனர். வலையில் விழக்கூடிய பெண்களை தேர்வு செய்து சாட் செய்து வந்த சுமன் அவர்களின் புகைப்படங்களை கேட்டு வாங்கியுள்ளார்.

அதன் பின் அவற்றை மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பியதுடன் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாக மிரட்டி பணம் வாங்க ஆரம்பித்துள்ளார். இதில் பெண் ஒருவரிடம் மிகவும் அத்துமீறி நடந்துகொள்ள அவர் சைபர் கிரைம் பொலீஸில் புகார் அளித்துள்ளார். சுமனை கைது செய்த பொலீஸார் அவரது ஃபேஸ்புக்கை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர். காரணம் பேஸ்புக்கில் சுமார் 70 பெண்களிடம் சுமன் பெண்ணாக நடித்து பணம் பெற்றுள்ளார். பொலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.!!