" "" "

முகம் பார்க்காமல் ஃபேஸ்புக்கில் காதலித்த இளைஞன்..பின் நடந்த கேவலம்..! இளைஞர்களே உஷார்…!!

காதல் கண்களை மறைத்துவிடும் என்பார்கள் ஆனால் சிலரது காதல் மிக மோசமான காதலாக இருக்கிறது.. சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு தேவையானவர்களை தேடிக் கொள்கின்றனர் பின்னர் அதனால் அவஸ்த்தையும் படுகின்றனர். அண்மையில் பெங்களூரை சேர்ந்த 27 வயது இளைஞரான அசோக் குமார் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. வீடியோ கால் இல்லை, புகைப்படம் இல்லை. காதல் கோட்டை திரைப்படத்தில் போல் பார்த்துக் கொள்ளாமல் காதலித்து வந்த நிலையில் மலேசியாவில் இருந்து அமுதேஸ்வரி இந்தியா வந்துள்ளார். அதன் பின் அசோக்குமாரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அமுதேஸ்வரியை பார்த்த அசோக் குமார் அதிர்ந்து போய் உள்ளார்.காரணம் 25 வயது என கூறிய அமுதேஸ்வரியின் வயது 42. அப்போது தான் அவர் தன்னை ஏமாற்றியதை அசோக் உணர்ந்துகொண்டதோடு திருமணம் செய்ய முடியாது என மறுத்துள்ளார்.

உடனடியாக மலேசியா சென்று விட்டார் அமுதேஸ்வரி. ஆனால் அடுத்து சில மணி நேரத்தில் விக்னேஸ்வரி என்ற பெண் அசோக் ஏமாற்றியதால் தனது சகோதரி அமுதேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளதுடன் சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பயந்துபோன அசோக் குமார் விக்னேஷ்வரியை சந்திக்க சென்ற போது மறுபடியும் ஏமாற்றப் பட்டது தெரியவந்தது. விக்னேஷ்வரி என கூறி மெசேஜ் செய்தது அமுதேஸ்வரி சந்திக்கவும் மிரட்டவும் செய்த நாடகம் என்பது புரிந்தது.

இதனால் திருமணம் செய்ய முடியாது என வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அமுதேஸ்வரி அசோக் தன்னை ஏமாற்றி விட்டதாக பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து இருவரையும் விசாரித்த பொலீஸார் சமாதானப் படுத்தி அனுப்பி உள்ளனர்..!!