" "" "

“அவள் இது வரை இப்படி இருந்ததில்லை, இப்போது ஏன் இப்படி என எனக்கும் தெரியவில்லை” அனிதா சம்பத்தின் கணவர் போட்ட சோகமான பதிவு..!!

பிரபல தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி தனது அழகாலும், தமிழாலும் அனைவரையும் கவர்ந்தவர் அனிதா சம்பத். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அனிதா சம்பத் தனித்து போராடி தனது குடும்பத்தை காப்பாற்றியதாக கடந்த கால வாழ்க்கை டாஸ்கில் கூறி இருந்தார்.

அனிதா ரசிகர்களிடம் அதிகம் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் போதே பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில மாதங்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அனிதா அழு மூஞ்சியாகவே இருக்கிறார். எல்லோரும் தான் சொல்வதை கேட்க வேண்டும் என நினைக்கும் அனிதா எல்லோருடனும் ஏதாவது ஒரு விடயத்திற்கு சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் செய்தி வாசிப்பாளராக இருந்த போது அனிதாவை நேசித்த ரசிகர்கள் இப்போது வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் அனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து இணைய தளத்தில் அக்டிவாக இருக்கும் பிரபாகரன் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து என் செல்லம்மாவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை, எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு முறை சரி பார்த்துவிடுவேன், அப்படியும் முடியாமல் போனால் போனில் சரி பேசி விடுவேன், இன்றுடன் நான் அவளை பிரிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, எப்படி இருக்கிறேன் என்று தெரியவில்லை, அவளை பிரிந்து நான் இவ்வளவு நாள் இருந்ததில்லை.

அவளும் தான். எப்படித் தான் இருக்கிறாள் என்பது தெரியவில்லை, நானும் எப்படி மாறினேன் என்று தெரியவில்லை, நிச்சயம் அவள் வெற்றிபெற்று வரும் வரை காத்திருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்..!