" "" "

” என்னால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை, பயமாக இருக்கிறது,” ரசிகர்களை அதிர வைத்த “என்னை அறிந்தால்” குழந்தை நட்சத்திரம் அனிகா.!!

என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதை கவர்ந்த அனிகா அண்மையில் ரசிகரின் கேள்விக்கு அளித்துள்ள பதில் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 16 வயதான அனிகா கடந்த சில மாதங்களாக மிக மோசமான கவர்ச்சி ஆடைகளுடன் புகைப்பட ஷூட் எடுத்து வருகிறார்,

இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது, இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்தனர். ஆனால் திடீரென ஒரு நாள் எனக்கு படிக்க வேண்டும், படிக்க ஆசையாக இருக்கிறது என பதிவிட்டார், பின்னர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அனிகா எனக்கு சினிமா பெரிதாக பிடிக்கவில்லை, படிக்க தான் ஆசை என கூறினார், இதனால் அனிகா கட்டாயப் படுத்தி நடிக்க வைக்கப் படுகிறார் என்ற செய்திகள் வெளியானது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அவரது தாயார் தான் இப்படி செய்கிறார் என பலரும் கூறினார்கள். இந்த நிலையில் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ள அனிகா, எனக்கு இப்போதெல்லாம் வெளியே செல்லவே பயமாக உள்ளது. என்னை பலர் பல விதமாக கிண்டல் செய்கின்றனர். சிலர் ஆடைகளை குறை சொல்கின்றனர், சிலர் என் உயரத்தை கிண்டல் செய்கின்றனர், நீ ஏன் இவ்வளவு குள்ளம் என பலரும் சிரிக்கின்றனர்.

என்னால் எப்போதும் ஹீரோயின் ஆக முடியாது நாம் குள்ளமான பெண் என்கின்றனர். நான் எப்போது ஹீரோயின் ஆக வேண்டும் என்று கேட்கிறேன், எல்லோரும் என்னிடம் இதே கேள்வியை கேட்கிறீர்கள். என் நிலையில் இருந்து பாருங்கள் உங்களுக்கு என் வலி பிரியும் என தெரிவித்துள்ளார்.!