" "" "

நேற்றைய தினம் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வெற்றி பெற்ற ஆரிக்கு அனிதா போட்ட பதிவு.!! இதையும் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் 16 crore வாக்குகள் பெற்று நடிகர் ஆரி வெற்றி பெற்றார். ரேகா, வேல்முருகன், ரியோ, சனம், அனிதா, ரம்யா, பாலா, சுரேஷ், கேப்ரியலா, சோம், நிஷா, ரமேஷ், ஆரி, ஆஜித், ஷிவானி, அர்ச்சனா, சம்யுக்தா, சுஜி, என 18 பேருடன் தொடர்ந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக சோம் சேகர், ரம்யா, ரியோ, பாலா, ஆரி ஆகியோர் இருந்தனர்.

இதில் மூன்றாம் இடத்தை ரியோவும், 2ம் இடத்தை பாலாவும் டைட்டிலை ஆரியும் பெற்றுக் கொண்டனர். மற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி போல் சீசன் 4ல் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஆரி வெற்றி பெற்றாலும் ஆரியால் சிறந்த போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டது யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

உணவு விடயத்தில் ஆரியுடன் சண்டையிட்டதால் சனம், ஆரியை எதிர்த்து பேசியதால் அர்ச்சனா, அனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டுக் கேட்டுவிட்டு பொது இடத்தில் பேச அதை எதிர்த்து பேசியதால் அனிதா என ஆரி ரசிகர்களால் தான் இறுதி வரை சிறந்த போட்டியாளர்களால் வர முடியாமல் போனது. விவசாயம், சமூக சேவை இதனை வைத்தே மக்கள் மனதில் இடம்பிடித்த ஆரி டைட்டில் வெற்றி பெற்றார்.

முகென் ரித்விகா அளவிற்கு ஆரி டாஸ்க் கூட செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று. எது எப்படியானாலும் ஆரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிதா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் “வாழ்த்துக்கள் ஆரி பிரதர்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது..!!