" "" "

பாஸ் வீட்டிற்குள் வந்த அனிதாவை மோசமாக திட்டி தீர்க்கும் ஆரி ரசிகர்கள்.!! இது தவறான விடயம் கண்டிக்கும் நெட்டிஷன்கள்.!!

பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிய அனிதாவை ஆரி ரசிகர்கள் வெளியேற்றினார்கள். பைனல் வர வேண்டும் என பலரும் எதிர் பார்த்திருந்த அனிதா ஆரியுடன் சண்டையிட்டதால் ஆரி ரசிகர்கள் ஆஜித், ஷிவானிக்கு வாக்களித்ததால் அனிதாவின் வாக்குகள் குறைந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார். வெளியே சென்றதுமே அனிதாவின் தந்தை இறந்து விட்டார்.

இது அனிதாவிற்கு மிகப் பெரிய இழப்பாகும். வெளியே சென்று கூட அனிதாவால் அவரது தந்தையை உயிருடன் பார்க்க முடியாமல் போனது, இது அனிதாவால் தாங்க முடியாமல் கதறி அழுதது அவரது தந்தையின் மரண சடங்கின் போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதன் பின் மீடியாக்கள் முன் அனிதா வராத நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

அழுதுகொண்டே வந்த அனிதாவை பார்த்ததும் அனைவருமே அழுது விட்டனர். அனிதாவை யாராலும் திட்ட முடியாது, அவரது மனம் தற்போது மிகவும் உடைந்து போய் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் ஆரியின் ரசிகர்கள் சிலர் அனிதாவை கேவலமாக பதிவிட ஆரம்பித்துள்ளனர். அனிதா வீட்டிற்குள் வந்ததும் ஆரியுடன் மிகவும் நெருக்கமாக தன் அண்ணனை போல் அன்பாக இருந்துள்ளார்.

இதனை ட்ரோல் செய்துள்ளவர்கள் என்ன வெளியே போய் ஆரியின் மாஸை பார்த்துவிட்டு வந்து ஒட்டிக் கொள்கிறாயா.? அதை வெளியே போக முதல் தெரிஞ்சிருக்கனு என் கூறி வருகின்றனர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே ஆரி சனம் அனிதா மூவரும் குரூப்பாகவே இருந்தார்கள். ஆரி, அனிதா அர்ச்சனாவிடம் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்து கொண்டதை பொதுவாக பேசியதால் தான் சண்டை வந்தது, ஆனால் மறுபடி அதுவும் மனமுடைந்த நிலையில் இருக்கும் அனிதாவை ட்ரோல் செய்வது மிக மோசமான செயலாகும் !!