" "" "

ஒரே நேரத்தில் உணவு, ஒரே நேரத்தில் காதலனுடன் உறவு…ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும்…அசத்தும் ஆஸ்திரேலிய இரட்டை பெண்கள்..!

ஆஸ்திரேலியா “பேர்த்” தில் வசித்து வரும் அன்னா மற்றும் லூசி என்ற இரட்டை சகோதரிகளின் வித்தியாசமான ஆசை நிறைவேறப் போவதாக அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உலகில் ஒரே மாதிரியான உருவத்தை கொண்ட இரட்டை சகோதரிகளான அன்னா மற்றும் லூசி இருவரிலும் சிறு வேற்றுமை கூட இருக்க கூடாது என நினைத்ததால் தங்களை வேறு படுத்திக் அடையாளம் காணும்படி இருந்த உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துகொண்டனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிறு வயதிலேயே ஆசைப்பட்டது போல் ஆடை , ஆபரணங்கள் முதல் காதலன் வரை தேர்வு செய்து கொண்டனர். இருவரும் ஒரே இளைஞரை காதலித்ததுடன் அவருடன் வாழ்ந்தும் வருகின்றனர். உறங்குவது, உண்ணுவது, அத்துடன் உறவு கொள்வது வரை ஒரே நேரத்தில் செய்துகொள்கின்றனர். தற்போது விசித்திரமாக யோசித்துள்ள இவர்கள் ஒரே காதலனால் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இருவரும் கர்ப்பம் தரிப்பது என்பது கடினமான ஒன்றாகும். இதனை வைத்தியர்களால் உறுதி படுத்த முடியாது என்பதை அறிந்துகொண்ட சகோதரிகள் முடிவில் மாறாமல் இருந்ததுடன் அதற்கான செயலிலும் இறங்கியுள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாவற்கு ஐ.வி. எப் எனும் முறையை செய்ய இருக்கின்றனர்.

அதாவது அன்னா மற்றும் லூசியின் கருமுட்டைகளில் அவரது விந்துக்களை ஒரே நேரத்தில் செலுத்தினால் இருவரும் கர்ப்பமாகும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இதனை கையில் எடுத்துள்ளனர். இவர்களுக்கு சீக்கிரமே இந்த முறையில் மூலம் இருவரும் கர்பமாக 75% வாய்ப்புகள் உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ள இவர்களிடம் இது பற்றி கேட்ட போது ஆசை பட்டது போல் இருவரும் ஒன்றாகவே இருக்கிறோம், மரணம் வரை இப்படியே இருப்போம் என தெரிவித்துள்ளார்கள்