காதலிக்க மறுத்த பெண்ணுக்கு ஆட்டோ சாரதி செய்த கொடூர செயல்..! கதறும் பெற்றோர்.!!

இந்தியாவில் 19 வயது யுவதி ஒருவரை இளைஞர் ஒருவர் சோடா போத்தலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. கேரளா காரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் அஷிகா. இவரை அனு என்ற ஆட்டோ சாரதி கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அஷிகா இவரது காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அனுவின் தொல்லை அதிகரித்ததால் தந்தையிடம் இது பற்றி அஷிகா கூறிய நிலையில் தந்தை பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். பொலீஸார் அனுவை அழைத்து விசாரணை செய்த போது அஷிகாவை தொல்லை செய்ய மாட்டேன் என பொலீஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இது நடந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் காலை 11.30 மணியளவில் அஷிகா வசிக்கும் இடத்திற்கு அனு வந்துள்ளார். அஷிகா அனு விவகாரம் ஏற்கனவே முடிந்து போன ஒன்று என்பதால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் திடீரென அஷிகாவின் வீட்டிற்குள் நுழைந்த அனு மறைத்து வைத்திருந்த சோடா போத்தலால் அஷிகாவின் கழுத்தை அறுத்ததுடன் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டுள்ளார். கதறல் சத்தம் கேட்டு அயலவர் வந்து பார்த்த போது இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இருவரையும் மீட்டு வைத்தியசாலை எடுத்துச் செல்லும் வழியில் அஷிகா இறந்துவிட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பின் அனுவும் இறந்துள்ளார். இந்த சம்பவம் பிரதேச மக்களை அதிர வைத்துள்ளது..!!