" "" "

என் உயிரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி, புத்தாண்டு தினத்தில் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..! சூப்பர் ஸ்டாரின் தற்போதைய நிலை இது தான்.!!

டிசம்பர் 31ம் திகதி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப் பட்டார். இரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதன் பின் 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றார்.

அதன் பின் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக ரசிகர்கள் மத்தியில் இருந்த கேள்விக்கு முடிவை அறிவித்தார். அதாவது இன்று அல்ல நாளை என கூறிக்கொண்டிருந்த அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு “உடல் நிலை ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அரசியலுக்கு வரமாட்டேன்” என அறிவித்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் ரஜினி ரசிகர்கள் மனம் உடைந்தனர்..ஏன் தலைவா ? அரசியலுக்கு வா என போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் அரசியல் வாழ்க்கை வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கிவிட்டார். இந்த நிலையில் ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் தனது உயிரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தான் உடல் நலத்துடன் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்றும் புகழ்ந்துள்ளதுடன் அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.!