" "" "

பிக் பாஸ் வீட்டில் இருந்து பைனல் செல்லாமல் 5 லட்சம் பணத்துடன் வெளியே செல்வது இவர் தான்.!! இதனால் ரியோக்கு அதிகரிக்கும் டைட்டில் வின்னர் வாய்ப்பு.!!

பிக் பாஸ் வீட்டில் ஷிவானியின் வெளியேற்றத்தை தொடர்ந்து தற்போது போட்டியாளர்கள் 6 பேர் பைனலிஷ்டாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். பொதுவாக 5 பேர் மட்டுமே பைனல் செல்லும் நிலையில் இம்முறை 6 பேர் பைனலிஷ்டாக தேர்வாகி உள்ளனர். ஆரி, பாலாஜி, ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், சோம் சேகர்,கேப்ரியலா ஆகியோர் பைனலிஷ்டாக இருக்கின்றனர்.

இதில் ஆரிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பிக் பாஸுக்கு வெளியே இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால் தொலைகாட்சியின் செல்லப் பிள்ளையான ரியோ ராஜ்க்கும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆரி, பாலாஜி, ரம்யா பாண்டியன் ஆகியோர் தனித்து விளையாடிய சிறந்த போட்டியாளர்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் ரியோ சோம் கேப்ரியலா மூவரும் அன்பு குரூப்பை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இன்னுமொரு டாஸ்க் உள்ளது. அந்த டாஸ்க் என்ன சென்றால் பணம். 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப் படும், விரும்பியவர்கள் வெளியே செல்லலாம். 5 லட்சம் போதாது என்று இருந்தாலே இந்த பணம் 10 லட்சம் வரை அதிகரிக்கப் படும். இம்முறை யார் இந்த பணத்தை எடுத்துச் செல்வார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

ஆரி கண்டிப்பாக எடுக்கப் போவதில்லை, காரணம் அவருக்கு வெளியே ரசிகர்கள் இருப்பது தெரியும். அதே போல் பாலாஜி, ரியோ, ரம்யா எடுக்க வாய்ப்பில்லை. இம்முறை இந்த பணத்தை எடுத்துச் செல்லப் போவது கேப்ரியலா அல்லது சோம் தான். ஆனால் இவர்களில் ஒருவர் வெளியே சென்றாலும் ரியோக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களின் ரசிகர்கள் கண்டிப்பாக ரியோவிற்கு வாக்களிப்பார்கள். இருப்பினும் சோம் அல்லது கேப்ரியலா இவர்களில் ஒருவரே பணத்துடன் வெளியேறப் போகிறார்.!