" "" "

9 வயதில் 190 கிலோ இருந்த உலகிலேயே உடல் எடை கூடிய சிறுவன் Arya முற்றிலும் உடல் எடை குறைத்து இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? அம்மாடி இவரா அவர் என வியக்க வைக்கும் புகைப்படம் இதோ.!

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் என கூறப்பட்ட arya தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து ஸ்லிமாக மாறி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உணவில் அதிக விருப்பம் கொண்ட arya தனது 9 வயதில் வேளைக்கு 2கிலோ வரை உணவை எடுத்துக் கொள்வதுண்டு.

பிறக்கும் போது சாதாரண குழந்தைகளை விட எடை அதிகமாக் பிறந்தாலும் அதனை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை பெற்றோரிடம் இருந்தது. ஆனால் வளர வளர arya நொறுக்கு தீனி சாப்பிடுவது அதிகமானது. உணவின் அளவு அதிகரிக்க உடல் எடையும் அதிகரித்தது..

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

10 வயதில் 190 கிலோ இருந்தார் arya. ஆர்யாவின் உடல் எடை அதிகரிப்பால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதனால் வருந்திய பெற்றோர் வைத்தியர்களின் ஆலோசனை படி செயற்பட ஆரம்பித்தனர். மருத்துவர்களால் aryaவின் இரைபை அறுவை கிசிக்கை மூலம் குறைக்கப் பட்டது. இந்த சிகிச்சை முடிந்து ஒரே மாதத்தில் 40 கிலோ குறைந்தார் arya.

இதனை தொடர்ந்து உடற்பயிற்சி, உணவு கட்டுப் பாடு என எடை குறைக்கும் முயற்சியில் முழுவதும் இறங்கினார். இதனால் 130 கிலோவானார் arya. உடல் எடை குறைந்தது உடலுக்கு புது தெம்பு தர தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது 14 வயதாகும் ஆர்யாவின் உடல் எடை 82 கிலோ மட்டுமே.

தற்போது தனது அனைத்து வேலைகளையும் தனியாக செய்துகொள்ளும் arya, பாடசாலை செல்லவும் தயாராகி விட்டார். ஆனால் பாடசாலைகள் கொரோனாவால் மூடப் பட்டுள்ளதால் திறக்கும் வரை காத்திருப்பதாக கூறும் arya ஆரம்பத்தில் ஏன் இந்த வாழ்க்கை என்று தோன்றியது, தற்போது இந்த வாழ்க்கை எத்தனை அழகானது என்று தோன்றுகிறது, இந்தோனேஷியா மக்கள் அனைவரும் என்னை நேசிக்கின்றனர், இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.!!