" "" "

நேற்றைய தினம் அஸ்வின் கண்ணீர் விட்டு அழுதது ஏன்? ஷிவாங்கி அஸ்வினின் அதிர வைத்த நடனம்.! இதோ வைரலாகும் பதிவுகள்.!!

நேற்றைய தினம் இணையத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் சில புகைப்படங்கள் வைரலானது. இந்த புகைப்படங்களில் அஸ்வின் குமார் என்கிற அஸ்வின் கண்ணீர் விட்டு அழுத படி இருக்க புகழ் ஆறுதல் கூறுவது போல் இருந்தது.

ஆனால் வீடியோ எங்கே தேடியும் கிடைக்கவில்லை, காரணம் அது விருது விழாவில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள். பிரபல் சேனலில் விருது விழா இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட அஸ்வினுக்கு தொலைக்காட்சியில் அதிக விருப்பத்திற்குறியவர் விருது கிடைத்தது.

இது வரை எந்த ஒரு விருதையும் பெறாத அஸ்வினுக்கு இந்த விருது கண்ணீரை கொடுத்துள்ளது. மேடையில் அஸ்வின் ஆனந்த கண்ணீர் விட்ட போது புகழ் அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோவை குறித்த சேனல் இன்னும் வெளியிடவில்லை.

நேற்று லைவ்வில் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி மற்றும் அஸ்வின் சூப்பரான டான்ஸ் ஒன்றையும் வெளிப்படுத்தியுள்ளனர்.!