நேற்றைய போட்டியில் இந்திய அணி போல் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி திணறக் காரணம் என்ன.? இறுதி போட்டிக்கு செல்லப் போவது யார்.!?

நேற்றைய தினம் நடைப்பெற்ற இந்திய நியூஸிலாந்து அணிகளுகிடையிலான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது, இதனை தொடர்ந்து இறுதி போட்டிக்கு நியூஸிலாந்து தகுதிபெற்றது. இன்று அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி இடம் பெற்று வருகிறது,

நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார்கள்.

நேற்று இந்தியா என்ன மாதிரியான மனநிலைக்கு தள்ளப் பட்டதோ அதே மனநிலையில் இன்று அவுஸ்திரேலியா இருக்கிறது. நேற்று அடுத்தடுத்து முக்கிய விக்கட்டுக்களை இந்தியா இழந்தது, அதே போல் இன்று அவுஸ்திரேலியா தனது முக்கிய விக்கட்டுக்கள் மூன்றை இழந்து விளையாடி வருகிறது.

14 ஓவர் முடிவில் 43 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 3 விக்கட்டுகளை இழந்திருகின்றது அவுஸ்திரேலியா. பொறுத்திருந்து பார்க்கலாம் நியூஸிலாந்து அணியை இறுதி போட்டியில் எந்த அணி சந்திக்க போகிறது என்று..!!

You might also like
error: Alert: Content is protected !!