ஆஸி. காட்டுத்தீ: நிவாரணத்துக்கு பல கோடி நிதி ஒதுக்கீடு!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் பரவியுள்ள காட்டுத்தீ நிவாரணத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக் கணக்கான வன உயிரினங்கள் மரணித்துள்ளன. லட்சக் கணக்கான மக்கள் உடமைகள இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் சிறியளவில் மழை பெய்தமையால் காட்டுத்தீயின் வேகம் குறைந்துள்ளது என அறியமுடிகின்றது.

இந்நிலையில், காட்டுத்தீ நிவாரண உதவிக்காக இரண்டு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு பொது அமைப்புகள், தனியார் என நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.