ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவு..!! காரணம் இது தான்…கவலையில் மக்கள்.. கண்டுகொள்ளுமா பீட்டா.!?

ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரியும் தீயை கட்டுப் படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய அரசு தடுமாறி வருகிறது. இந்த தீயினால் இதுவரை சுமார் 500 மில்லியனுக்கு அதிகமான விலங்குகள் மரணித்தும் பல மில்லியன் விலங்குகள் பாதிக்கப் பட்டும் உள்ளன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த தீ பரவல் காரணமாக இது வரை 24 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த செய்திகள் வெளியாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இன்னொரு செய்தியை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ளது.அதில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் ஆஸ்திரேலிய அரசு வெளியிட்ட செய்தியில் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் அதிகம் இருக்கின்றது அங்கு அவை அதிகளவில் தண்ணீர் பருகுவதால், கோடை காலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவற்றை சரி செய்யவே அவைகளை சுட்டுக்கொல்லும் முடிவை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது. இந்த முடிவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும்..

தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றும் இது போன்ற தீ விபத்து இனி ஏற்பட கூடாது என்ற எண்ணத்தினாலும் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ள அதேவேலை குறி பார்த்து சுடும் வீரர்கள் தேர்வு செய்யப் பட்டு விமானத்தின் மூலம் சென்று 10 ஆயிரம் ஒட்டங்கள் சுட்டுக் கொள்ளப் படும் என அறிக்கையில் மேலும் குறிப்பிட பட்டுள்ளது..!!