அத்துமீறி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகளுக்கு இனி தடுப்பு அகதி முகாம்..! அதிகம் பகிருங்கள்.!!

ஆஸ்திரேலியா அரசின் உள்துறை அமைச்சர் பீட்டர் டண்டன் அத்துமீறி ஆஸ்திரேலியாவிற்குள் ஏமாற்றுக்காரர்கள் மூலம் வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என பலமுறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் படகுகளின் மூலம் எல்லைக்குள் நுழைய முற்பட்ட இலங்கை இந்திய உட்பட பல நாடுகளை சேர்ந்த அகதிகள் கைது செய்யப் பட்டிருந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கு மேட்பட்ட மக்கள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்களை பப்பு கினியா மற்றும் நவுரு தீவுகளில் இது வரை தடுத்து வைக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மனுஸ்தீவின் தலை நகரான போர்ட் மோர்ஸ்பை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த தீவில் அமைக்கப் பட்டிருக்கும் சிறையின் அருகே அமைக்கப் பட்டிருக்கும் முகாமில் குறித்த அகதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் என்றும், இவை ஆஸ்திரேலிய அரசின் முழுமையான ஒத்துழைப்புடனும் பண உதவியுடனும் அமைக்கப் பட்ட முகாம் என அகதிகள் நல வழக்கறிஞர் ஜன் ரிண்டோல் கூறியுள்ளார்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக மனுஸ்தீவில் அகதிகளுடன் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் பிரபல ஊடகவியலாளரும் அகதியுமான பெஹ்ரூஸ், அரச அதிகாரிகளால் கொடுக்கப் பட்ட உத்தரவு கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் புது இடமான முகாமிற்கு மாற்றப் படுவதால் உங்கள் தொலைபேசி உட்பட அனைத்து தகவல் பரிமாற்ற உபகரணங்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்,

உங்களுக்கு கொடுக்கப் படும் அறையை விட்டு வெளியே செல்ல கூடாது, உங்களுக்கு தேவையான உணவுகள் உங்கள் அறைக்கு அனுப்பப்படும் என குறிப்பிட பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறுகையில் ஆஸ்திரேலிய அரசுக்கும் இந்த முகாமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்..!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

You might also like
error: Alert: Content is protected !!