அவுஸ்திரேலிய தீ: அதிர்ச்சி கொடுக்கும் செய்மதிப் படங்கள்!

அவுஸ்திரேலியா காட்டுத் தீயில் கருகிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வை இங்கிருக்கும் நமக்கு உணர்த்துவது அங்கிருந்து எடுக்கப்பட்டும் புகைப்படங்கள்தான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

காடுகளுக்கருகில் இருக்கும் மனிதர்கள் தம் உடமைகளை இழந்து, உயிரைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவிட்டனர், ஆனால், காட்டையே வாழ்விடமாகக் கொண்ட உயிரினங்கள், போக திசையின்றி அங்கேயே கருதி உயிர்நீர்க்கின்றன.

இந்நிலையில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட – தீயில் கருகிய பிரதேங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அப்புகைப்படங்கள் பூமியை மனிதன் ஆக்கிரமித்ததன் விளைவுகளைத் தெட்டத்தெளிவாக உரைத்து நிற்கின்றன.

நாசாவின் Earth Observatory ஆறு மாத இடைவெளியில் எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி லேன்ட்சாட்-8 என்ற செயற்கைக்கோளால் எடுக்கப்பட்ட விக்டோரியா மற்றும் நியூசவுத் மாகாணங்கள் பசுமையான நிலப்பரப்புடன் காணப்படுகிறது.

அதே நிலப்பரப்பை ஆறுமாதம் கழித்து அதாவது இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி எடுக்கப்பட்ட இரண்டாவது புகைப்படத்தில் மிக அடர்த்தியான புகையால் மூடப்பட்டுக் காணப்படுகிறது.

இந்தப் புகைப்படங்களே மனித குலத்தின் எதிர்காலம் குறித்து தெளிவாக விளித்து நிற்கின்றன.