" "" "

“அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தில் விஜயுடன் அசத்திய குழந்தைக்கு தற்போது 20 வயது.! எப்படி இருக்கிறார் தெரியுமா இதோ புகைப்படம்.!!

திரைப்படங்களில் ஹீரோ ஹீரோயின்களை விட மக்களை இலகுவாக கவர்ந்திழுப்பவர்கள் குழந்தை நட்சத்திரங்கள் தான். திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தால் கூட குழந்தை நட்சத்திரங்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுகின்றனர். அப்படி “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதித்தா.

தமிழ் தின போட்டிக்கு விஜய் விளையாட்டாக சொல்லி கொடுக்கும் கவிதையை சொல்லி பரிசு பெறுவதோடு மழலை கவி என்ற பட்டமும் பெறுவார் நிவேதித்தா. இந்த திரைப்படத்தில் சிறிய காட்சிக்கு நிவேதித்தா வந்து சென்றாலும் அவரால் தான் படத்தின் கதையே ஆரம்பமாகிறது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி விஜய்க்கு இருக்கிறது என்பதை விஜய் உணர்ந்துகொள்வது திரைப்படத்தில் நிவேதித்தா இறந்த பின்னர் தான். அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் பின் இவரை பெரிதாக திரைப்படங்களில் காண கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நிவேத்திதாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. தற்போது நிவேதித்தாவிற்கு 20 வயதாகிறதாம். அழகிய தேவதையாக மாறி இருக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக அட குட்டிக் குழந்தையாக நாம் நினைத்த நிவேதிதாவா இது என் ரசிகர்கள் கொமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கேப்ரியலா, அனிகா, சாதனா, என குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோயினாக மாறி வரும் நிலையில் நிவேதித்தாவின் புகைப்படங்களும் அதில் சேர்ந்துள்ளது.!!