" "" "

பாலியல் தொல்லை தாங்க முடியாது கல்லூரி ஹாஸ்டலில் இருந்து காப்பாற்றும் படி கதறி அழும் யுவதி வெளியிட்டுள்ள வீடியோ..!! தயவு செய்து பகிருங்கள்…!!

வண்டலூர் மெடிக்கல் காலேஜில் அஸிஸ்டெண்ட் பேராசிரியராக பணிபுரியும் யுவதி ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது . இந்த வீடியோவில் பேசியுள்ள யுவதி..எனது பெயர் பபீலா.. நான் இங்கு உள்ள ஹாஸ்டலில் தங்கி உதவி பேராசிரியராக பணி புரிகிறேன்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எனக்கு இங்கு பாலியல் ரீதியான கொடுமைகள் நடக்கிறது. உடல், ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் பட்டு விட்டேன், ஹாஸ்டல் வார்டன் லட்சுமி உட்பட சிலர் என்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதை நான் எதிர்த்ததால் என்னை பற்றி தவறாக பேசத் தொடங்கினார்கள். மற்றவர்களிடமும் அவதூறு பரப்பினார்கள். அது மட்டிம் இன்றி இங்கு எனக்கு கொடுக்கப் பட்ட அத்தனை வசதிகளையும் எடுத்துவிட்டார்கள்.

உணவை நிறுத்தி விட்டதுடன் இரண்டு வாரங்களாக எனக்கு தண்ணீர் வருவதில்லை, அதனையும் நிறுத்திவிட்டார்கள். இப்போது எந்த வசதியும் இல்லாமல் இருக்கிறேன். குளித்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. அத்துடன் உணவும் இல்லை இதனை வெளியே சொல்லவும் விடுகிறார்கள் இல்லை, தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவுங்கள் என வீடியோவை முடித்துள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக இந்த பெண் குறிப்பிடும் இடத்தில் இருப்பவர்கள் பொலீஸில் அறிவித்து குறித்த பெண்ணுக்கு உதவுங்கள்.ஏராளமான கனவுகளுடன் மருத்துவ துறையில் கால் வைக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைக்கு நிச்சயம் தீர்வு வேண்டும்…!

Video Copyrights & Credits Owned by :