உங்கள் குழைந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா.? ஒரு முறை இதை செய்யுங்கள் மீண்டும் விரல் சூப்பாது…!!

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் விரல் சூப்புவார்கள்.இதனை தடுக்க எமது பெற்றோர் ஏகப்பட்ட விடயங்கள் செய்வார்கள். விரலில் வேப்பம் எண்ணெய் பூசுவது, பிளாஸ்டர் போடுவது, விரலில் அடிப்பது, அதே போல் சிவப்பான பெயின்ட் பூசுவது போன்றவை செய்வார்கள்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஒரு சிலர் வன்முறையை கையில் எடுத்து குழந்தையின் விரலை காயப் படுத்தியும் வைப்பார்கள். இவற்றால் குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்தி விடுமா என கேட்டால் நிச்சயம் இல்லை தான். நீங்கள் இப்படி செய்வதால் குழந்தை மனதளவில் பாதிக்கப் படுமே தவிர வேறு எதுவும் நடக்காது.

சரி அப்படியானால் எப்படி விரல் சூப்புவதை நிறுத்துவது ? வாங்க பார்ப்போம்: குழந்தைகளுக்கு கையில் வேலை கொடுக்க வேண்டும். குறிப்பாக சில குழந்தைகள் குழந்தைகள் புத்தகம் பென்சில் கொடுத்தால் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார்கள்.

அதே போல் சில குழந்தைகள் சித்திரங்கள் வரைவார்கள், சிலர் பெயிண்டிங் செய்வார்கள், சிலர் குட்டி கார்கள் , பொம்பைகள் வைத்து விளையாடுவார்கள். இவை அனைத்துமே குழந்தைகள் விரல் சூப்புவதை மறக்க வைக்கக் கூடியவை.

பெற்றோர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குழந்தைகளுடன் அருகில் இருந்து இவற்றை பழக்கிவிட்டால் போதும் விளையாட்டில் கவனம் செலுத்தும் குழந்தைகள் விரல் சூப்புவதை மறந்துவிடும். பகலில் மட்டும் அல்ல சில குழந்தைகள் இரவில் கூட விரல் சூப்பும்.

அதனால் குழந்தைகள் இரவில் விரல் சூப்பும் போது கையை வாயில் இருந்து எடுத்து கையில் பொம்மை அல்லது வேறேதும் விளையாட்டு பொருளை வைத்து விடுங்கள். இரண்டு மூன்று நட்கள் செய்து பாருங்கள் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்திவிடும்..!