" "" "

உங்கள் குழந்தைக்கு 3 வயதாகி விட்டதா.? அப்படியானால் குழந்தையின் முன்னால் இவற்றை இனி செய்யாதீர்கள்..! குழந்தைகள் நலனுக்காக பகிருங்கள்..!!

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?கணவன் மனைவியிடையே சண்டை வந்தால் பிள்ளைகள் இருக்கும் போது அதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒற்றுமையை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். அவர்கள் முன் புறம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களை பார்த்து பிள்ளைகளும் அதையே பின்பற்றுவார்கள்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் சில நல்ல சிந்தனைகளை பேசுங்கள் அதுவே அவர்கள் மனதில் பதியும்.சிறு குழந்தைகளை மிரட்டும் போது, ‘கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

நீங்கள் குழந்தைகள் முன் பொய் கூறுவதை தவிருங்கள். அதற்கு அவர்களை உடந்தையாகவும் வைக்காதீகள் உதாரணத்திற்கு, ‘அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே ‘அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.

குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. ‘உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

பிள்ளைகள் படிப்பில் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் பாசிட்டிவ் அப்ரோச் கொடுங்கள். தட்டி ஊக்கபடுத்துங்கள். திட்டாதீர்கள் அன்பால் திருத்துங்கள்.குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.