" "" "

நடிகர் பாக்கியராஜின் முன்னாள் மனைவி யார் தெரியுமா? பூர்ணிமா இல்லையாம் இந்த நடிகை தானாம்..இதோ வைரலாகும் புகைப்படம் !!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பாக்கியராஜ். இயக்குனர் மட்டும் இன்றி நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் வைத்திருப்பவர். நட்சத்திர சினிமா குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

மனைவி பிரபல நடிகை, மகள் சரண்யா நடிகை, மகன் சாந்தனு நடிகர். அதே போல் வீட்டுக்கு வந்த மருமகளான கிகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, மட்டும் இன்றி ஆல்பம் சிலவற்றையும் செய்துள்ளார். பலருக்கும் பாக்கியராஜ் அவர்களின் குடும்பம் என்றால் இவ்வளவு தான் தெரியும்.

ஆனால் பாக்கியராஜ் அவர்களுக்கு நடிகை பூர்ணிமா முதல் மனைவி இல்லையாம். பாக்கியராஜின் முதல் மனைவி நடிகை பிரவீனாவாம். ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்த போது காதல் வர 1981ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்களாம்.

2 வருடங்கள் மட்டுமே பாக்கியராஜ் அவர்களுடன் வாழ்ந்த பிரவீனா 25 வயதில் உடல் நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். 1983ம் ஆண்டு பிரவீனா மரணமடைந்ததை தொடர்ந்து 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்ட பாக்கிராஜ் 1985ல் சரண்யா 1986ல் சாந்தனு என இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த தகவல் பல வருடங்களின் பின் தற்போது வைரலாகி வருகின்றது.!