" "" "

இன்றைய தினம் தனது அழகிய மனைவியை விவாகரத்து செய்த நடிகர் பாலா..! காரணம் இது தானாம்..!!

அன்பு திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. முதல் திரைப்படம் பெரிதாக வெற்றிபெறாவிட்டாலும் பாலாவிற்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தது.. ஆனால் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் தமிழில் நடிக்க முடியவில்லை.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் தம்பிகளில் ஒருவராக நடித்தார் மறுபடியும் வாய்ப்புகள் வர நடித்துக் கொண்டிருக்கின்றார். பாலா அவரது நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர்.

இருவரும் இரு மனதுடன் இருந்ததால் இவர்களுக்கு சேர்ந்து வாழ கால அவகாசம் கொடுக்கப் பட்டது. இருப்பினும் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக கூறியதை அடுத்து இன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து வழங்கப் பட்டுள்ளது.

இது குறித்து பாலா தெரிவிக்கையில் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டோம்.. அடிக்கடி கருத்து முரண்பாடுகள் வந்துகொண்டே இருந்ததால் குழந்தையின் நலன் கருதி பிரிய முடிவெடுத்தோம்.. குழந்தை அவரது தாயுடன் தான் வளர்வாள் .. என தெரிவித்துள்ளார்..!!