" "" "

“எனக்கு பாலாவை பிடிக்கும்” பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கேப்ரியலா வெளியிட்ட பதிவு..!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் நேற்றைய தினம் வெளியேறியவர் கேப்ரியலா. பிரபல தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமான கேப்ரியலா நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரானார். அதன் பின் 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்ததுடன் அப்பா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதன் பின் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் சோர்வாக இருந்த கேப்ரியலா ஓரளவு விளையாட ஆரம்பித்த போது அன்பு குரூப்பில் சேர்ந்தார். இதனால் மறுபடி பின்னோக்கி சென்றார். அர்ச்சனா நிஷா ஆகியோர் வெளியேறிய பின் மறுபடி விளையாட ஆரம்பித்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இறுதி நேரத்தில் கேபிக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும் வெற்றி வாய்ப்பு இருக்கவில்லை. இதனால் பணப்பெட்டியுடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சிலர் உங்களுக்கு பாலாவை பிடிக்குமா என்று கேட்ட போது ஆமாம் எனக்கு பாலாவை நிறைய பிடிக்கும் என்று பதில் அளித்துள்ளார்.! இதனை பாலா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.!!