" "" "

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் பாலாவிற்கு கொடுக்கப் பட்ட மிகவும் குறைவான சம்பளம்.! எவ்வளவு தெரியுமா இதை பாருங்க.!!

பிக் பாஸ் வீட்டில் ரசிகர்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். சிறு வயதில் இருந்தே பெற்றோரின் அரவணைப்பு இல்லாத பாலாஜி மற்றும் அவரது அண்ணன் இருவரும் தங்கள் சொந்த முயற்சியிலேயே முன்னேறி தங்களுக்கான இடத்தை பிடித்துக் கொண்டனர்.

பாலாஜிக்கு மாடலிங் பிடிக்கும், ஆனால் அந்த துறையில் வழி நடத்த யாரும் இல்லாத நிலையில் தனியாக சென்று போட்டிகளில் பங்கேற்று தோற்று, பல வீழ்ச்சிகளை கண்டபின் வெற்றி பெறும் வாய்புகளும் கிடைத்தது. வெறும் 24 வயதில் பல சாதனைகளை செய்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்தியாவின் சார்பில் வெளிநாடு சென்று வெற்றியை பெற்றுக் கொண்டார். என்ன தான் வெற்றி பெற்றாலும் பாலாஜியை யாருக்கும் தெரியாது. தன்னை யார் என மக்கள் மத்தியில் காட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் வீட்டில் உள்ள அனைவரையும் காட்டோ காட்டு என்று காட்டினார்.

பின் ரசிகர்களின் ஆதரவுடன் பைனல் வரை வந்து இரண்டாம் இடம் பெற்றுக் கொண்டார். தற்போது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் குழுவினரால் பாலாஜிக்கு கொடுக்கப் பட்ட சம்பளம் எவ்வளவு என்பது வெளியாகி உள்ளது.

வீட்டிலேயே மிகவும் குறைந்த சம்பளம் பாலாவிற்கு தானாம் பாலாவின் சம்பளம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் தானாம். ஆஜித்திற்கு கூட 35 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் பட்டதாம். ஷிவானிக்கு 75 ஆயிரமாம். பாலா பிரபலம் இல்லாததால் தான் இவ்வளவு குறைவான சம்பளமாம்.!!