கொடூரமான நோய்களை விரட்ட மீண்டும் வாழை இலை சாப்பாட்டுக்கு மாறுங்கள்…காரணம் என்ன தெரியுமா .!? படித்து பகிருங்கள்…!

எப்போதும் நாங்கள் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்குத்தான் ஆசைப்படுகின்றோம். நம் முன்னோர்கள் காரணத்துடன் செய்த ஒவ்வொன்றையும் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே மறுத்துவருவதால்தான் நமக்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில்தான் இந்த வாழையிலையும் அடங்குகின்றது. நாம் காலம் காலமாக தலை வாழை இலைபோட்டு முக்கனியும் மூவிருந்தும் உண்டு வாழ்ந்தவர்கள். ஆனால் தற்போதோ இல்லாத நோய்களுக்கெல்லாம் மருந்துதேடி கண்டபடி அலைந்துகொண்டிருக்கின்றோம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சரி விடயத்திற்கு வருவோம். நம்முடைய முன்னோர்கள் வாழையிலையில் உண்ணவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் காலம் மாறியது. தொழிற்துறைகளில் நுழைந்த வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி நம்மையும் மாற்றியது. கோப்பைகளில் உண்ணும் பழக்கத்திற்கு நாம் பழகிக் கொண்டோம். ஆரோக்கியத்தை நமக்கு வழங்கக் காத்திருந்த வாழை இலைகள் சருகுகளாக எரிந்துகொண்டிருக்கி்ன்றன.

இன்றும் கிராமங்களில் வாழை இலையில் உண்ணும் பழக்கம் இன்னும் மிச்சம் இருக்கின்றது என்பதுதான் சற்றே ஆறுதலாக இருக்கின்றது. அந்த வகையில் வாழை இலை கொண்டுள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பது பற்றியும் அதை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் பார்க்கலாம்.

உண்மையில், வாழை இலைகளில் மனித ஆரோக்கியத்திற்குத் தேவையான அதிகமான பயன்கள் உள்ளன. வாழை இலைகளின் நன்மையெனில் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். வாழை இலைகளில் உள்ள முக்கிய பொருட்களில் லிக்னைன், ஆலன்டல்ன், ஹெமிசுலுலோசா, பாலிபினோல்ஸ் மற்றும் புரோட்டீன்ஸ் ஆகியவை அடங்கும். வெப்பத்தை குறைப்பது மற்றும் தலைவலிகளை விடுவித்தல் போன்ற நன்மைகளை வாழை இலையானது வழங்குகிறது. சமிபாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும்

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செமிபாடு அடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. இது நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

விசமுறிப்பானாகத் தொழிற்படும், சிலவேளைகளில் சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் எந்த சந்நுக்கிருமிகளும் உடலில் கலப்பதில்லை.

உடல் அழகைப்பேண உதவும்.வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்..