" "" "

முட்டையில் வெள்ளைக் கரு மட்டும் போதும், நீங்கள் இயற்கையாகவே அழகாகி விடுவீர்கள்..!!

மருத்துவ குறிப்புகள் பகுதியில் இன்று நாம் பார்க்கப் போவது முகத்தில் இருக்கும் பள்ளம் போன்ற அடையாளங்களை இயற்கையாகவே மறைய வைப்பது எப்படி என பார்க்கலாம்..: இதற்கு இரண்டு முறையான குறிப்புகளை உங்களுக்காக கொடுக்கின்றோம். முட்டை ஒன்றை எடுத்து அதில் சிறிய ஓட்டை ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

முட்டையின் வெள்ளைக் கரு ஒரு கரண்டி அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அடித்து நன்றாக நுரை வந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முகத்தை நன்றாக கழுவி துடைத்துவிட்டு அடித்து வைத்திருக்கும் முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் பூசுங்கள். கீழ் இருந்து மேல் நோக்கி பூச வேண்டும். பூசி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் சோப் பேஷ் வாஷ் எதுவும் பயன் படுத்தாமல் குளிந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். 1 மணி நேரம் கழித்து முகத்தை மீண்டும் நீங்கள் கழுவிக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்யும் போது முகத்தில் இருக்கும் பள்ளம் மறைந்துவிடும். முகத்தில் அதிகம் பருக்கள் வந்தால், முட்டையின் வெள்ளை கருவில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தொடர்ந்து ஒரு வாரம் பூசி வாருங்கள்.

முகப் பருக்கள்.பரு வந்த அடையாளங்கள், தழும்புகள், அத்துடன் பள்ளங்கள் போன்றவை மறைந்து முகத்திற்கு பளபளப்பு கொடுக்கும். இதில் அசைவம் பயன்படுத்தாதவர்கள் முட்டைக்கு பதில் கற்றாழை ஜெல் பயன் படுத்தலாம். ஆனால் முட்டையின் வெள்ளைக் கரு கொடுக்கும் பயன் முழுவதும் கிடைக்காது. பிடித்தால் பகிருங்கள்..!