திருமணத்திற்கு முதல் நாள் முகம் அழகா இருக்கனுமா.!? அட இத பண்ணி பாருங்கள்..சும்மா அழகாகிடுவீங்க..!!

இரவு வேளையில் உறங்கச் செல்வதற்கு முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும். பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு லேசாகக் கழுவி விட்டு, கடலை மாவால் மென்மையாகத் தேய்த்து பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டுத் தூங்கினால், கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.சந்தனம், 4 சொட்டு ரோஸ்வாட்டர், 5 சொட்டு பால் கலந்து முகத்தில் பூசி விட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவாக இருக்கும்.

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.
பயிற்றுமாவு, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது ஒரு சிறந்த ஃபேஷியல்.களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றைக் கலந்து, கொதிக்கவைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக, பளபளப்பாக மாறும்.வறண்ட சருமம் உள்ளவர்கள் பாலாடையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வறண்ட தன்மை மாறி முகம் பளபளப்பாகும்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.