" "" "

பிக் பாஸ் வீட்டிற்குள் மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும் ரியோ.!! வீட்டிற்குள் மொபைல் கொண்டு வந்தது யார்.!?

பிக் பாஸ் வீட்டில் தொலைகாட்சி, தொலைபேசி போன்ற பொழுதுபோக்கு விடயங்கள் இருக்கக் கூடாது என்பது கட்டாயமாகும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள் அவர்களின் ஆடைகள் தவிர்த்து விலை உயர்ந்த எந்த பொருட்களையும் கொண்டு வர கூடாது. 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதுடன் பகலில் உறங்கவும் கூடாது.

இப்படி பல கட்டுப் பாடுகள் விதிக்கப் படுகிறது, அத்துடன் மட்டுப் படுத்தப் பட்ட உணவு பொருட்களே போட்டியாகர்களுக்கு கொடுக்கப் படுகிறது. ஆனால் தற்போது தமிழில் இறுதி கட்டத்தை நெருகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவை பின்பற்றப் பட்டதா என்று கேட்டால் சந்தேகம் தான். இம்முறை அளவுக்கு அதிகமான உணவு பொருட்கள் கொடுக்கப் பட்டது, இதனால் உணவை வீணாக்கினார்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அது மட்டும் இன்றி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டர்கள், வீட்டில் தூங்கினார்கள், இப்போது மொபைல் போனும் பாவித்துள்ளார்கள் என்ற செய்தி வைரலாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் கொண்டாட்ட வாரமாக அமைந்தது. வெளியே போன போட்டியாளர்கள் வந்திருந்தார்கள்.

இவர்கள் வந்திருந்த போது ரியோ போனில் பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனை வெளியே இருந்து வந்தவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்களா என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. சிலர் இது போன் இல்லை என கூறினாலும் பலர் இது போன் தான் என கூறி வருகின்றனர்.,,!!