" "" "

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப் பட்ட விருதுகள். விஷேடமாக சோம் சேகருக்கு கொடுக்கப் பட்ட யாரும் எதிர்பார்க்காத விருது.! கமலஹாசனை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது தொலைகாட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இது 6 மணித்தியாலங்கள் ஒளிபரப்பாக உள்ளதால் வழமையாக ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிப் பற்றியும் போட்டியாளர்கள் பற்றியும் அதிகம் பேசிவிட்டதால் இன்று வீட்டில் நடக்க இருக்கும் விடயங்கள் பற்றி பேசலாம்.

இன்றைய தினம் சோம் சேகர் முதலாவதாக வெளியேறுவார், அவரை தொடர்ந்து ரம்யா பாண்டியன், அடுத்து ரியோ ராஜ் வெளியேற்றப் படுவார். இந்த நிலையில் வழமை போல் இம்முறையும் விருதுகள் வழங்கப் படுகின்றன. ஆனால் பொருத்தமான விருதா எனக் கேட்டால் ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப் பட்ட விருதுகள் பொருத்தமானது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குறிப்பாக பாலாஜி முருகாஸுக்கு “Game Changer” விருது வழங்கப் பட்டது. இது பொருத்தமான விருது தான். பாலாஜி இல்லாவிட்டால் பிக் பாஸ் சீசன் 4 என்ற ஒன்று இருந்திருக்காது. அடுத்து ரம்யா பாண்டியனுக்கு “Singhapenne” விருது வழங்கப் பட்டது. ரம்யா இந்த விருதுக்கு தகுதியானவர் தான். இறுதி வரை பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியவர் ரம்யா பாண்டியன் தான்.

அர்ச்சனாவிற்கு “Best Cook” விருது வழங்கப் பட்டது. இதை கூட ஏதோ ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சோம் சேகருக்கு வழங்கப் பட்ட விருதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் என பலர் கேள்வி கேட்ட சோம் சேகருக்கு “Mr.clean” விருது கிடைத்துள்ளது.

இந்த விருதை இந்த சீசனில் காரணமே இல்லாமல் சோம் சேகருக்கு கொடுத்துள்ளனர். இதனை பார்த்த பலரும் அட பாவமே யாருக்கு என்ன விருது என தெரியாமல் கொடுத்து விட்டீர்கள் என திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.!!