திருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..! குவியும் வாழ்த்துக்கள்.. இதோ புகைப்படங்கள்..!

பிக் பாஸ் வீட்டில் இருந்து 5லட்சம் ரூபா பணத்துடன் வெளியேறியவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி உட்பட சில சீரியல்களிலும் நட்புன்னா என்னான்னு தெரியுமா திரைப்படத்திலும் நடித்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துகொண்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஆரம்பத்தில் இருந்தே காதல் என சர்ச்சையை ஏற்படுத்திய கவின் சாக்‌ஷியுடன் காதலில் விழுந்து பின் அதில் இருந்து மீண்டார். அதன் பின் லொஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். இறுதியில் லொஸ்லியாவிற்காக விட்டுக் கொடுத்துவிட்டு 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

வெளியே வந்த கவினுக்கு ரசிகர்களிடம் ஏராளமான வரவேற்பு இருந்தது. தற்போது சில திரைப்படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இன்றைய தை பிறப்பை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்.

வேஷ்டி சட்டையில் கல்யாண மாப்பிள்ளை போல ரசிகர்களுக்கு தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். கவின்… இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.. .!