பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி.!! மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த லொஸ்லியா. வைரலாகும் வீடியோ இதோ.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து போட்டியாளர்கள் அவர்களது வேலையை பார்க்கப் போய் விட்டார்கள். நாம் என்ன தான் அடித்துக் கொண்டாலும் வெளியே வந்ததும் அவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர். நேற்றைய தினம் சீசன் 4 பைனல் நிகழ்ச்சி நடந்தது, டைட்டிலை நடிகர் ஆரி வெற்றிபெற்றார்.
இதன் பின் பிரபல தொலைகாட்சி DJ பார்ட்டி ஒன்றை போட்டியாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது. பிக் பாஸ் வெற்றியை கேக் வெட்டி போட்டியாளர்கள் கொண்டாடி இருந்தனர். இதில் சீசன் 3 போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக நீண்ட நாட்களின் பின் லொஸ்லியா DJ பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தார். இந்த பார்ட்டியில் அனைவரையும் விட பாலாஜி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இதில் கேக் வெட்டி சனம் பாலாவிற்கு ஊட்ட பாலாவும் சனத்திற்கு கேக் ஊட்டியதுடன் சனம் ஷெட்டியின் முகத்திலும் பூசி குறும்பு செய்தார்,
அத்துடன் பாலாஜி சனம் ஆகியோர் குதித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட லொஸ்லியா ஷெரின் ஆகியோருடன் போட்டியாளர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.!!
#BiggBoss4Tamil success event #AariArjunan #BalajiMurugaDoss #RamyaPandiyan #Kamalhassan #BiggBossTamil pic.twitter.com/ZXAcjM5x3d
— Raj (@rajvr24) January 18, 2021