“காதலை முறித்தால் உன்னை கொலை செய்துவிடுவேன்” காதலன் மிரட்டியதால் பிரபல பிக் பாஸ் போட்டியாளர் தற்கொலை முயற்சி..!! வீடியோ இணைப்பு.!

பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் வெளியாகி மக்களை கவர்ந்து வருகிறது. தமிழ் தெலுங்கு மொழிகளில் மூன்றாவது சீசன் முடிந்த நிலையில் ஹிந்தியில் 13வது சீசன் இடம் பெற்றுக் கொண்டிருகின்றது. இந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட நடிகையும் மாடலுமான திருநங்கை அஞ்சலி அமீர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி உள்ளதுடன் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். திருநங்கையான அஞ்சலி அமீர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருவதுடன் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவர் கேரளாவை சேர்ந்த ஆனஸ் வி.சி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அஞ்சலி உழைக்கும் பணம் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் ஆனஸ் குடி பார்ட்டி என பணத்தை வீணாக்கி வந்துள்ளார்.

இனி வாழ முடியாது என்ற நிலையில் அஞ்சலி ஆனஸை பிரிய முடிவு எடுத்த போது ஆனஸ் காதலை முறித்துக் கொண்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். எவ்வளவோ போரடியும் முடியாத நிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தனது மரணத்திற்கு ஆனஸ் மட்டுமே காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.