தேசிய அளவில் வைரலான பிக் பாஸ் கவின் மற்றும் லொஸ்லியா.! தன் வாழ்க்கையை மாற்றிய இரவு பற்றிய புகைப்படத்தை பதிவிட்ட கவின்..!!

பிக் பாஸ் சீசன் 3 என்றதும் நினைவில் வரும் இருவர் கவின் மற்றும் லொஸ்லியா தான். டைட்டில் வின்னராக முகென் தேர்வு செய்யப் பட்டாலும் முகென் எங்கே என்று தேடும் நிலை தான் தற்போது உள்ளது, ஆனால் கவின் மற்றும் லொஸ்லியா பற்றிய செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் கவின் மற்றும் லொஸ்லியாவை அவர்களின் ரசிகர்கள் தேசிய ரீதியில் வைரலாக்கி உள்ளனர். கவின் மற்றும் லொஸ்லியா சந்தித்து நேற்றுடன் 200 நாட்கள் முடிவடைந்ததை முன்னிட்டு கவ்லியா 200 என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினார்கள். இது டுவிட்டரில் இந்திய ரீதியில் நேற்றைய தினம் முதலிடம் பிடித்தது…

இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவரது நண்பர்கள் அவரை அனுப்பி வைத்த இரவு அது என்றும் அதன் பின் தான் தன்னுடைய வாழ்க்கை மாறியது என்றும் குறித்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இதுவும் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் அஜித், விஜயை தொடர்ந்து டுவிட்டர் ஹேஷ்டேக்கில் அதிகம் ட்ரண்டிங்கில் வருவது கவின் மற்றும் லொஸ்லியா தான்..!!