" "" "

நாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை அள்ளிய போட்டியாளர்.! இறுதி இடத்தில் யார் தெரியுமா இதோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 28 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று கண்டுகொள்ளவே முடியவில்லை. ஒரு நாள் ஒருவர் நல்லவராக இருக்கிறார், அடுத்த நாளே மாறிவிடுகிறார்.

இதனால் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரி வீட்டில் அட்டகாசம் செய்து வருகிறார். யார் என்ன சொன்னாலும் உடனடியாக பதில் கொடுப்பதுடன் சண்டைக்கும் சென்று விடுகிறார்.

இந்த நிலையில் இன்றைய தினம் நாமினேஷனில் ஆரி, பாலாஜி, சனம், அர்ச்சனா, அனிதா, சோம், சுரேஷ், ஆகியோர் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் ஏற்கனவே அர்ச்சனா மீது கொலை வெறியில் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாக்களிக்காமல் உள்ளனர்.

அதே நேரம் நாமினேஷனில் வந்துள்ள ஆரிக்கு சில நிமிடங்களில் லட்சக்கணக்கான வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டாவது இடத்தில் பாலாஜி உள்ளார் பாலாஜியும் 1லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் வரலாற்றில் நாமினேஷனில் வந்து சில மணி நேரங்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெறுமை ஆரிக்கே உண்டு.!!