பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேற்றப் படும் இரண்டு பேர்.! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை நடக்கும் அதிரடி.!
தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இன்றைய ட்ரண்டிங் நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் சீசன் 4 தான். என்ன தான் மற்றைய சீசன்கள் போல் இல்லாவிட்டலும் ஓரளவு பார்க்க கூடியதாக உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களாக இருப்பது ஆரி மற்றும் பாலாஜி தான் இருவரையும் ஒரு சிலர் வெறுத்தலும் பலர் நேசிக்கின்றனர்.
அதனால் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வந்தாலும் காப்பாற்றப் பட்டு விடுகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் யார் யார் நாமினேஷனில் வந்தது என்பது நாம் அறிந்தது தான். அதாவது ஆரி, பாலாஜி, சோம் சேகர், சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ், சனம்ஷெட்டி. என 7 பேர் நாமினேஷனில் வந்துள்ளனர். இவர்களில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் ஆக போகின்றனர்.
இந்த வாரம் டபுல் எவிக்ஷன் உள்ளதாம். வீட்டில் 14 பேர் உள்ள நிலையில் இன்னும் இருவர் வீட்டிற்குள் வர போகின்றனர். 16 போட்டியாளர்கள் என்றால் நிச்சயம் இந்த வாரம் 2 எவிக்ஷன் இருக்க வேண்டும். நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விட்ட பின் 16 போட்டியாளர்கள் மிகவும் அதிகமே, அதனால் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் டபுல் எவிக்ஷல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் 50 நாட்கள் கடந்த பின் 16 போட்டியாளர்கள் இருப்பதும், தொடர்ந்து டபுல் எவிக்ஷன் நடப்பதும் இதுவே முதல் முறை.
இந்த வாரத்தில் வெளியேற்றப் பட போகிறவர்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் சம்யுக்தா, மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப் படலாம் என கூறப்படுகின்றது. சம்யுக்தா இல்லாவிட்டால் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப் படலாம்.பொறுத்து இருந்து பார்ப்போம்.!!