" "" "

தமிழில் பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமாகும் மாதம் தேதி அறிவிப்பு.! இனி 10 வருடங்களுக்கு பிக் பாஸ் தொகுப்பாளர் இவர் தான்.!!

ஆங்கிலத்தில் பிக் பிரதராக ஆரம்பிக்கப் பட்ட நிகழ்ச்சி பின் இந்தியாவில் ஹிந்தியில் பிக் பாஸாக மாற்றம் பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆங்கிலத்தில் அந்தரங்கம் உட்பட குழந்தை பிரசவம் வரை பிக் பிரதர் வீட்டில் இடம்பெறும், இது எமது நாட்டிற்கு சரி வராது என ஆரம்பத்தில் போராட்டங்கள் நடந்தாலும் பின் கைவிடப் பட்டது. ஹிந்தியில் தற்போது பிக் பாஸ் சீசன் 14 சென்றுகொண்டிருக்கின்றது.

ஆங்கில நிகழ்ச்சிக்கு நிகராக செல்கிறது என்றே சொல்ல வேண்டும். காதல், காமம் உட்பட அடி தடி தான் அதிகம் உள்ளது. ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மலையாளம் என தொடர்கிறது. தெலுங்கு மற்றும் தமிழில் சீசன் 4 நிறைவடைந்து விட்டது, மளையாளத்தில் சீசன் 3 ஆரம்பமாக உள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் தமிழில் சீசன் 5 எப்போது என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. இதற்கான பதில் தற்போது வெளியாகி உள்ளது. சீசன் 10 வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார். 10 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ள நிலையில் வேறு எந்த தொலைகாட்சி சேனலிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகாது.

சீசன் 5திலும் கமலஹாசன் தான் தொகுப்பாளர். பிக் பாஸ் சீசன் ஜூன் மாத இறுதியில் ஆரம்பிக்கப் பட உள்ளது. 2020 வருடம் கொரோனா வைரஸ் காரணமாக அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப் பட்ட நிலையில் 2021ல் ஜூன் மாத இறுதியில் ஆரம்பிக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.!!