" "" "

ஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.! காப்பாற்றப் பட்ட ரம்யா பாண்டியன்.! வெளியேறுவது இவர் தான்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் freeze டாஸ்க் நடந்துகொண்டிருக்கின்றது. போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். நேற்றைய தினம் ஷிவானியின் அம்மா மற்றும் பாலாவின் அண்ணா இருவரும் வந்திருந்தார்கள்.. அதில் ஷிவானியின் அம்மா ஷிவானியை லெப்டு ரைட்டு வாங்கி விட்டார்.

இதெல்லாம் மரியாதையா, இப்படியா நடந்துகொள்ள வேண்டும் என திட்டியதுடன் ஆரிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்..அதே நேரம் பாலாவின் அண்ணா ரமேஷ் பாலாவை விட்டுக் கொடுக்காமல் நீ நன்றாக விளையாடுகிறாய், நீ எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கிறது, விளையாடி விட்டு வா என கூறிச் சென்றார். அதே போல் இன்றைய தினம் வீட்டிற்குள் வந்த ரம்யாவின் அம்மாவும்.

நீ சிறப்பாகவே விளையாடினாய், விளையாடுகிறாய், வாழ்த்துக்கள், சில நேரம் நீ வெளியேறினாலும் இதற்கு காரணம் நீ இல்லை. நீ சிறப்பாக விளையாடுகிறாய் என கூறிச் சென்றார்.! எல்லோரும் ரம்யா அல்லது ஆஜித் தான் வெளியேற்றப் படுவார் என கூறி வந்த நிலையில் திடீரென ஷிவானியின் வாக்குகள் குறைந்துள்ளது.

Unofficial பக்கங்கள் அனைத்திலும் ஷிவானியின் வாக்குகள் முற்றிலும் குறைய ஆஜித் மற்றும் ரம்யாவின் வாக்குகள் அதிகரித்துள்ளது. இறுதி இடத்தில் இருந்த ரம்யா தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளார். மூன்றாம் இடத்தில் இருந்த ஷிவானி இறுதி இடத்திற்கு வந்துள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் கண்டிப்பாக ஷிவானி வெளியேற்றப் படுவார் என்று கூறப்படுகின்றது..

டபுள் எவிக்‌ஷனாக இருந்தால் ஆஜித் மற்றும் ஷிவானி வெளியேற்றப் படலாம் என்று கூறப்படுகின்றது. எது எப்படி போனாலும் ஆரி ரசிகர்களின் ஆசை வீணாகிவிட்டது. ரம்யாவை காப்பாற்றுவது கண்டிப்பாக பாலா & ரம்யா ரசிகர்களாக தான் இருப்பார்கள்..,!!