“பிகில் திரைப்படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள்” நடிகர் ஆனந்தராஜ் பரபரப்பு பேட்டி…!!

அட்லீயின் இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் “பிகில்” பெண்களுக்கான முக்கியத்துவத்தை எந்த அளவிற்கு கொடுக்க வேண்டும் என பிகில் திரைப்படத்தில் சிறப்பாக காட்டி இருந்தார்கள். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப் பட்ட இந்த திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

யோகி பாபு, விவேக் , இவர்களுடன் அன்றைய முன்னணி வில்லன் நடிகரான ஆனந்த ராஜ் அவர்களும் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் பிரபல சேனலின் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆனந்தராஜ் எனக்கு இப்படி ஒரு அநியாயம் பிகில் திரைப்படத்தில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. சில காட்சிகள் மட்டும் அட்லீ கேட்டுக் கொண்டார். நானும் சம்மதித்தேன்.

பணமும் தந்துவிட்டார்கள். திரைப்படம் வெளியான பின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவரும் எனக்கு திட்ட ஆரம்பித்து விட்டனர். ஏன் என கேட்டேன் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை எடுத்துவிட்டேன் என்றார்கள். நான் படத்தை பார்க்க வில்லை.

அட்லீ அவர்களுக்கு கால் செய்து கேட்டேன். திரைப்படத்தின் நீளம் அதிகம் என்பதால் எனது காட்சிகள் நீக்கப் பட்டதாக கூறினார். என்னை ஏமாற்றிவிட்டார்கள். விஜய் நல்ல மனம் கொண்டவர். அவருக்காக ஏதும் சொல்லவில்லை. பிகில் திரைப்படத்தின் மீதான நல்ல எண்ணம் இப்போது இல்லை என கூறியுள்ளார்.