" "" "

நீங்கள் பிறந்த கிழமை என்ன.? இதோ நீங்கள் பிறந்த கிழமையின் படி உங்கள் ஜாதகம்..! இது உண்மை என்றால் பகிருங்கள்..!

பிறந்த திகதி, பிறந்த நேரம், பிறந்த எண், போல் பிறந்த கிழமையை வைத்தும் ஒருவரின் குணத்தை கணிப்பிட முடியுமாம். இன்று அப்படி கணிப்பிட்ட விடயங்களை பார்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்கள்: எப்போதும் குறும்பாக இருக்கும் இவர்கள் சின்ன சின்ன விடயங்களுக்கும் மனமுடைந்து போவார்கள், அழகும் திறமையும் நிறைந்த இவர்களுக்கு தங்கள் திறமைக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. என்ன தான் சிரித்து பேசினாலும் மனதின் ஓரத்தில் சோகம் இருந்துகொண்டே இருக்கும்.

திங்கள்கிழமை பிறந்தவர்கள்: வீட்டில் செல்லப் பிள்ளையாக இருக்கும் இவர்கள் எதையும் துணிந்து செய்ய தயங்குவார்கள்.அடுத்தவரின் உதவியை நாடும் இவர்கள் எப்போதும் தனித்து முடிவெடுக்க மாட்டார்கள். திருமண வாழ்க்கை சிலருக்கு சோகமானதாக இருக்கும். அதே போல் முதல் காதல் பிரிவும் சிலருக்கு ஏற்படும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

செவ்வாய் கிழமை பிறந்தவர்கள்: அழகானவர்களாக இருக்கும் இவர்கள் மற்றவர்களை இலகுவில் கவர்ந்துவிடுவார்கள். அடுத்தவரின் அறிவுரையை கேட்டாலும் தான் சுயமாகவே செயற்படுவார்கள். தனக்கு பிடித்ததை மட்டுமே செய்வார்கள். இலகுவில் காதலில் விழக்கூடிய இவர்கள் வெற்றியும் பெறுவார்கள்.

புதன்கிழமை பிறந்தவர்கள்: படிப்பில் கெட்டிக் காரர்களாக இருக்கும் இவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பார்கள்.பெரும்பாலும் புதன் கிழமை பிறந்தவர்கள் அரச உத்தியோகத்தில் தான் இருப்பார்கள். உயர்ந்தால் உயர்வும் தாழ்ந்தால் தாழ்வும் என இருப்பார்கள். குடும்பத்தில் நெருங்கிய ஒருவரை இழந்து இருக்கும் இவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள்: பெற்றோருடன் வசிப்பது குறைவாக இருப்பார்கள். பெற்றோர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கும். உறவுகள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பாசம் வைத்து ஏமாந்து போவார்கள், அன்புக்கு அடிமையாக இருக்கும் இவர்களின் அன்பை மற்றவர்கள் புரிந்துகொள்ள நீண்ட காலம் எடுக்கும்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள்: ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள இவர்கள் பெற்றோரின் பேச்சுக்கு கட்டுப் பட்டவர்களாக இருப்பார்கள். எந்த வேலையையும் உடனே முடிந்துவிட வேண்டும் என நினைக்கும் இவர்கள் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கஷ்டப் படுபவர்களுக்கு மனமிறங்கும் இவர்கள் தான தர்மம் செய்வதில் முதல் ஆளாக இருப்பார்கள்.

சனிக்கிழமை பிறந்தவர்கள்: புத்திசாலியாக இருப்பார்கள், ரொமாண்டிக் பார்வை கொண்ட இவர்களின் பேச்சில் இருந்து விலகிச் செல்வது கடினமான விடயமாக இருக்கும். அனைவரையும் இலகுவில் ஈர்ந்து விடும் இவர்களுக்கு தோல்விகள் பிடிக்காது.. வெற்றியை மட்டுமே ரசிக்க நினைப்பார்கள்..என்ன பிரண்ட்ஸ் கணிப்பு சரியா.அப்பிடின்னா பகிருங்கள்..!