அதிக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாகற்காய்ச் சம்பல் செய்வது எப்படி?
நம்மில் பலர் பாகற்காய் என்றதும் தன் கசப்புத் தன்மையைக் கருதி அதை சமையலில் அதிகமான நேரங்களில் ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வேண்டும். பாகற்காயின் இலையும் காயும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காயில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு அருமருந்தாக அமைகின்றது.
அந்த மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட பாவற்காயைப் பொித்தோ அல்லது கறி வைத்தோ அல்லது சம்பல் செய்தோ சாப்பிடும்போது அதன் கசப்புத் தன்மையானது தெரியாது. இங்கு பாகற்காயில் ருசியான சம்பல் செய்வது எவ்வாறு என்று பார்க்கலாம்.
பாகற்காய் சம்பல் செய்வதற்குத் தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் – 1
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறையைப் பார்க்கலாம்!
• முதலில் பாகற்காயை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு விரும்பியபடி வெட்டி கொள்ளவும். ஆனால் மெலிதாக வெட்ட வேண்டும்.
•அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சிறிதாக அரிந்து எடுத்துக்கொள்ளுங்க.
•பின்பு சட்டியில் எண்ணெயை சூடாக்கி பாகற்காயை பொரித்து எடுக்க வேண்டும்.
• அதன் பின் ஒரு பாத்திரத்தில் பொரித்த பாகற்காய், வெங்காயம், தக்காளி, மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக கருவேப்பிலை சேர்த்தக்கொள்ளுங்கள். வாசனையாக இருக்கும் அத்தோடு ஆரோக்கியமும் கூட.
ருசியான ஆரோக்கியமான பாகற்காய் சம்பல் தயார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”