" "" "

வீதியில் சென்றுகொண்டிருந்த இளைஞர் தெரு ஓரத்தில் அமர்ந்த நிலையில் மரணம்.! அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்.!

வீதியில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் வீதி ஓரத்தில் அமர்ந்த நிலையில் திடீரென மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹர மல்வத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடபெற்றுள்ளது. குறித்த இளைஞர் வீதியில் செல்லும் போது மார்பில் கை வைத்தவாறு நெஞ்சு வலியில் சென்றதாக மரணத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

34 வயதான குறித்த இளைஞர் ஆப்பிஸ் செல்வது போல் ஆடை அணிந்திருந்ததுடன் ஆரோக்கியமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென நெஞ்சில் கை வைத்தபடி தடுமாறியுள்ளார். பின்னர் ஓர் இடத்தில் சென்று அமர்ந்துள்ளார், அப்படியே சில நிமிடங்கள் இருந்த நிலையில் தலை கீழே தொங்க ஆரம்பித்துள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சந்தேகமடைந்த மக்கள் உடனடியாக பொலீஸாருக்கு அழைப்பை ஏற்படுத்திய நிலையில் இளைஞன் மரணமடைந்து விட்டதை உறுதி படுத்தினார்கள். குறித்த இளைஞர் கடவத்தை கொபிகாவத்தை பகுதியில் சில மாதங்களாக வாடகைக்கு வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞரின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாக சந்தேகம் வெளியிட்ட பொலீஸர் Pcr பரிசோதனை செய்யப் பட்டிருப்பதாக்வும் தெரிவித்துள்ளனர்.!/