பஸ் கவிழ்ந்து எட்டுப் பேர் பலி! பலர் கவலைக்கிடம்!!

பசறை, ஆறாம் கட்டைப் பகுதியில் 100 அடி பள்ளத்துக்குள் பஸ் கவிழ்ந்ததில், எட்டுப் பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுங்காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சம்பவம் குறித்து தெரியவருபவை வருமாறு-

பசறையிலிருந்து எக்கிராவப் பகுதி நோக்கிப் பயணிகளுடன் அரச பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இது பசறை, மடுல்சீமை பிரதான வீதியின் 6ஆம் கட்டைப் பகுதியில் இன்று மாலை ஐந்து மணியளவில் வீதியை விட்டு விலகி, 100 அடிப்பள்ளத்துக்குள் பாய்ந்துள்ளது.

இதனால், இதில் பயணித்த எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, சாரதி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பசறை மற்றும் பதுளை வைததியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்த விசாரணைகளை பசறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.