" "" "

கனடாவில் கணவரின் கழுத்தில் நாய் சங்கிலி போட்டு வீதிகளில் இழுத்துச் சென்ற மனைவி.!! பொலீஸாரை அதிர வைத்த உண்மை காரணம் இது தான்.!!

கனடாவில் தன் கணவனை நாய் போல் கட்டி இழுத்துச் சென்ற பெண் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. திருமணம் ஆகிவிட்டாலே ஆண்கள் மனைவியை சுற்றி வர தொடங்கி விடுவதுண்டு, இதற்கு சிலர் “குட்டி போட்ட நாய் போல் பொண்டாட்டிய சுற்றுகிறான்” என்று சொல்வார்கள். ஆனால் இங்கு நிஜமாகவே நாய் சங்கிலியில் கட்டப் பட்டு நாய் போல் கணவர் நடந்து சென்றது தான் அதிர்ச்சி.

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் மக்கள் வெளியே நடமாடுவதற்கு நேர கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. கனடாவில் சில பகுதிகளில் மாலை 7 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அவசிய தேவை இன்றி வெளியே மக்கள் செல்ல கூடாது என்ற சட்டம் போடப் பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை தடுக்கவே சட்டம் போடப் பட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் செல்லப் பிராணிகளை வெளியே அலைத்துச் செல்வதற்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் நேர கட்டுப் பாடு விதிக்கப் பட்ட பகுதியில் வசித்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆனால் வீதிகளில் பொலீஸார் பாதுகாப்பு பணிகளில் இருந்துள்ளனர். இதனால் திட்டம் தீட்டிய இருவரும் ஒருவர் நாயாக மாற முடிவு எடுத்துள்ளனர். அதன் படி கணவர் நாயாக மாறி உள்ளார்.

மனைவி கணவரின் கழுத்தில் நாய் சங்கிலியை கட்டி இழுத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ந்த பொலீஸார் விசாரணை செய்த போது தனது நாயை வெளியே அழைத்துச் செல்வதாக குறித்த பெண் கூறியுள்ளார். பொலீஸார் எச்சரித்த போது இது கணவர் இல்லை என்றும் செல்ல பிராணி என்றும் வாதாடியுள்ளார். பின் குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் எச்சரித்த பொலீஸார் கொரோனா சட்ட விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்துள்ளனர்.!!