google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

உள்ளாடையுடன் பொலீஸாரால் இழுத்துச் செல்லப் பட்ட கல்லூரி மாணவி..! மனதை கலங்க வைக்கும் வீடியோ..!( இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்..)

உளப்பிறட்சி பிரச்சனையால் பாதிக்கப் பட்ட கனடாவில் செவிலியர் பயிற்சி பெறும் மாணவியான மோனா Wang என்பவரை பெண் பொலீஸ் ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் ஒன்று பொலீஸார் உட்பட மக்களையும் அதிர வைத்துள்ளது. கெலோனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கற்றுவரும் மோனா உளப்பிறட்சி பிரச்சனையால் அவதி படுவதாகவும் அவருக்கு உதவும் படியும் மோனாவின் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க பெண் பொலீஸான Cpl. Lacy என்பவர் அங்கு சென்றுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அங்கு வந்த Lacy தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக மோனா நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி Lacy யை விசாரித்த போது மோனாவை பார்க்க சென்ற போது குளியலறையில் நினைவின்றி கிடந்ததாகவும், போதை மாத்திரைகள், மது போத்தல்கள் மோனா அருகில் கிடந்ததாகவும் தெரிவித்த Lacy ,

விலங்கு மாட்ட முயன்ற போது விடவில்லை என்பதால் சற்று கடினமாக விலங்கை மாட்டியதாகவும் ஏற்கனவே மோனாவின் முகம் மற்றும் கை காலில் காயம் இருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் மோனா வசித்த பகுதி சிசிடிவி காட்சிகளை பார்வையிடும் படி பொலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிசிடிவி காட்சிகளை பார்த்த பொலீஸார் உட்பட அதிகாரிகளும் அதிர்ந்து போனார்கள்.

மோனாவை குற்றவாளி போல் நடத்தியுள்ள Lacy மோனாவின் குளியலறையில் இருந்து வெறும் தரையில் இழுந்து சென்றுள்ளார். அதுவும் உள்ளாடையுடன். தலையை தூக்கி பார்த்த மோனாவின் கழுத்தில் கால் வைத்து மிதித்துள்ள பொலீஸ் பெண் தலைமுடியை பிடித்தும் இழுத்துள்ளார். இதனை பார்த்த நீதி பதி உடனடியாக பணிமாற்றம் செய்யும் படியும் Lacy யை விசாரித்து சட்ட ரீதியாக தண்டனை கொடுக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்..!!